திருவில்லிபுத்தூரில் ராணுவ வீரர் வீட்டில் பணம், நகை திருட்டு

Money and jewelery stolen from soldier's house in Srivilliputhur

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவில்லிபுத்தூரில் ராணுவ வீரர் வீட்டில் பணம், நகை திருட்டு
X

திருவில்லிபுத்தூரில், ராணுவ அதிகாரி வீட்டின் கதவை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (49). இவர் ராணுவத்தில் சுபேதார் மேஜராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன் விடுமுறையில் ஆனந்தராஜ் திருவில்லிபுத்தூருக்கு வந்தார். நேற்று சிவகாசியில் வசித்துவரும் தனது தந்தையை பார்ப்பதற்காக ஆனந்தராஜ் குடும்பத்துடன் சிவகாசிக்கு வந்தார். தந்தையை பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிப்பதை பார்த்து ஆனந்தராஜ் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த 80 ஆயிரம் ரூபாய் பணம், புதிய செல்போன், கேமிரா மற்றும் சில பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ராணுவ அதிகாரி ஆனந்தராஜ், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், ராணுவ அதிகாரி வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 23 Jun 2022 8:30 AM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்