சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்

உச்சநீதிமன்றம் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் முக்கிய மூல பொருளான பேரியம் நைட்ரேட் ரசாயனத்திற்கு தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்
X

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு தொழிலுக்கு பல்வேறு நெருக்கடி ஏற்பட்டு வருவதால் தொழில் நலிவடைந்து வேலைவாய்ப்பு குறைந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே உச்சநீதிமன்றம் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் முக்கிய மூல பொருளான பேரியம் நைட்ரேட் ரசாயன மூல பொருளுக்கு தடை விதித்துள்ளது. சரவெடி பட்டாசுக்கு தடை விதித்துள்ளது போன்ற காரணங்களால் பட்டாசு தொழிலை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பட்டாசு உற்பத்தியில் 30 சதவீதம் இடம்பெறும் சரவெடி பட்டாசு தொழிலை மட்டுமே நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ள நிலையில் சரவெடி பட்டாசுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையால் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதால் மத்திய அரசு சரவெடி பட்டாசு தயாரிக்க பரிந்துரை செய்ய வலியுறுத்தி சரவெடி பட்டாசு உற்பத்தி பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஈடுபட்ட இந்த போராட்டத்தின்போது காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் நீடித்த போராட்டம் பின்னர் காவல்துறையினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. மேலும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உதவி ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு அளித்துள்ளனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் சாலை மறியல் ரயில் மறியல் என அடுத்தடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 Nov 2021 9:42 AM GMT

Related News