திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா? விஜயபிரபாகரன் பதில்

திமுகவின் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும்; முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக உள்ளது என்று, விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா? விஜயபிரபாகரன் பதில்
X

விஜயபிரபாகரன்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

தேமுதிக எழுச்சியோடுதான் செயல்படுகிறது. வெற்றி தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம். மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகாரிக்காததால் தேர்தலில் தோல்வியுற்றோம். வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். வருங்காலத்தில் தேமுதிக ஆரம்பித்ததன் லட்சியம் நோக்கி பயணிப்போம்.

திமுகவின் கூட்டணி குறித்து, காலம்தான் பதில் சொல்லும். தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பான ஆட்சி செய்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. பழைய நிலைக்கு திரும்ப இன்னும் கொஞ்ச நாள் ஆகும். எங்களால் முடிந்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் நிச்சயமாக சந்திப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 11 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் : தமிழக அரசு
 2. விளையாட்டு
  ரஞ்சி கோப்பை: மத்திய பிரதேச அணி சாதனை
 3. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
 4. குமாரபாளையம்
  குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
 5. காஞ்சிபுரம்
  அ.தி.மு.க பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தான் வரனும்: காஞ்சியில் தமிழ்மகன்...
 6. நாமக்கல்
  நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.5.50
 7. தமிழ்நாடு
  காவிரி நீர் ஆணைய செயல்பாடு: அமைச்சர் துரைமுருகன் கண்டிப்பு
 8. நாமக்கல்
  நாமக்கல்லில் தேசிய அளவிலான லோக் அதாலத்: 1,890 வழக்குகள் ரூ.23.32 கோடி ...
 9. குமாரபாளையம்
  பல்லக்காபாளையத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் ...
 10. இந்தியா
  சொகுசு விடுதியில் பதுங்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாப்பு தர...