Begin typing your search above and press return to search.
கிடா முட்டும் போட்டியை, தேசிய விளையாட்டாக அறிவிக்க இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை
கிடா முட்டும் போட்டியை, தேசிய விளையாட்டாக அறிவிக்க முதல்வருக்கு இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
HIGHLIGHTS

இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பசீர் அகமது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் கிடா முட்டு சண்டை தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, தென்மாவட்டங்களில் பொங்கல் தினத்தையொட்டி , இந்த கிடா முட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வீர சோழனில் தமிழர் திருநாளை முன்னிட்டு கிடா முட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், காவல்துறை அனுமதி வழங்காததால் திடிரென்று போட்டிகள் நிறுத்தப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை போல கிடா முட்டு சண்டை போட்டியை தமிழக வீர விளையாட்டாக அறிவிப்பு செய்ய தமிழக முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பசீர் அகமது கோரிக்கை விடுத்துள்ளார்.