/* */

இராஜபாளையம் நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் வழங்காத இராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

இராஜபாளையம்  நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
X

இராஜபாளையத்தில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 30வது வார்டு பகுதியை சேர்ந்த தோப்புபட்டி பகுதி மக்கள் தங்கள் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனவும், பலமுறை நகராட்சியில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இன்று சங்கரன்கோவில் விலக்கு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

சாலை மறியல் போராட்டம் நடத்திய பெண்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தகவலறிந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் நகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதை கண்டித்து பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர். பின்னர் அப்பகுதியில் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நகரின் முக்கிய சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 10 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!