சிறுத்தை நடமாட்டம் ! வனத்துறை தீவிர தேடல்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிறுத்தை நடமாட்டம் ! வனத்துறை தீவிர தேடல்
X

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அல்லிக்குளம் மற்றும் கிழவனேரி கிராம பகுதிகளில் கடந்த 4 நாட்களாக சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு அல்லிக்குளம் பகுதிகளில் வீடுகளில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என வருவாய்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர்.

அதனடிப்படையில் இன்று அல்லிக்குளம், கிழவனேரி கிராம பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வத்திராயிருப்பு வனசரகர் கோவிந்தன் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். அதனுடைய கால்தடங்கள் தென்படுகிறதா மற்றும் எச்சம் ஏதேனும் தென்படுகிறதா என ஆராய்ந்து வருகின்றனர்.சிறுத்தை நடமாடும் அச்சத்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடமாட வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2021-04-09T00:04:11+05:30

Related News