/* */

விவசாயிகளுக்கு எதிரியாக செயல்பட்டுவரும் திமுக: அண்ணாமலை

திமுக எப்போதுமே விவசாயிகளின் எதிரியாகத்தான் செயல்பட்டு வருகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு எதிரியாக செயல்பட்டுவரும் திமுக: அண்ணாமலை
X

வந்தவாசியில் நடைபெற்ற பிரச்சார யாத்திரையில் பாஜக தலைவர் அண்ணாமலை.

என் மண், என் மக்கள் யாத்திரையை தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நேற்று (பிப். 5) மாலை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, 'சரித்திரத்தை மாற்றிய ஊர், வந்தவாசி. 250 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு படைக்கும் ஆங்கிலேய படைக்கும் யுத்தம் நடைபெற்றது. வந்தவாசி போர் என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்று, நாடு முழுவதையும் ஆண்டனர். நாட்டை விட்டு பிரெஞ்ச் படையினர் வெளியேறினர். இதேபோல், ஆன்மிகமும் ஆழமாக உள்ள ஊராகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முருகப் பெருமானுக்கு சிவன் காட்சிக் கொடுத்த தவளகிரீஸ்வரர் மலை உள்ளது. 120 அடி உயர கோபுரம் உள்ள பாண்டுரங்கர் கோயில் உள்ளது. வந்தவாசி 'கோரை பாய்' தமிழகத்தில் புகழ் பெற்றது. பாய் உற்பத்தியில் 5 ஆயிரம் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தேசூரில் நீர் மேலாண்மையை காப்பாற்றியதாக கல்வெட்டு உள்ளன. விவசாயத்துக்கு பெயர் பெற்ற ஊராகும்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். குடும்ப அரசியல், சாதி அரசியல், ஊழல் மற்றும் அடாவடியை மையப்படுத்தி 70 ஆண்டுகளாக ஆட்சி நடைபெற்று வருகிறது.

மக்களின் வளர்ச்சிக்காக இல்லாமல், குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டும் அரசு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார். அவரது மகன், மருமகன், அமைச்சர்களின் வளர்ச்சிக்காக மட்டும் ஆட்சி நடத்தப்படுகிறது.

கொடுமையான வாழ்க்கையுடன் விவசாயிகள் வாழ்கின்றனர். செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் திட்டத்துக்கு மூன்று போகம் விளையக்கூடிய நிலங்களை கொடுக்க மறுத்த விவசாயிகளை திமுக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. களத்தில் பாஜக இறங்க தயாரானதும் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவில் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பதிவு செய்து கைது செய்தது திமுக அரசு மட்டும்தான். ஊழல் மலிந்த திமுக ஆட்சிக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அமைய உள்ளன.

நாட்டில் முதல்முறையாக பழங்குடியினரை குடியரசுத் தலைவராக ஆக்கியது பாஜக அரசுதான். இதுவே உண்மையான சமூக நீதி ஆகும். ஆனால், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் போலி சமூக நீதி பேசி வருகின்றனா்.

3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவதாக உறுதி அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த இந்த 31 மாதங்களில் டிஎன்பிஎஸ்சி தோவு மூலம் 10,500 பேர் மட்டுமே அரசு வேலை பெற்றுள்ளனா்.

மோடியின் ஆட்சி, நேர்மையான ஆட்சி என பெயர் பெற்றுள்ளது.

அவா், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளாா். 57 ஆயிரம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 4.81 லட்சம் வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2.80 லட்சம் வீடுகளுக்கு கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. 3.58 லட்சம் பேருக்கு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 4.07 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் கௌரவ நிதி வழங்கப்பட்டுள்ளது.

வந்தவாசி கோட்டையை சுற்றுலாத் தலம் ஆக்கவும், கோரைப்பாய்க்கு புவிசாா் குறியீடு பெறவும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலா் அசுவத்தாமன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் பபாஸ்கரன், வேலூா் பெருங்கோட்ட பொறுப்பாளா் காா்த்தியாயினி, மாவட்டத் தலைவா் ஏழுமலை, நகரத் தலைவா் சுரேஷ், மாவட்டச் செயலா் வி.குருலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 6 Feb 2024 2:47 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை