/* */

வந்தவாசியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

வந்தவாசியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

வந்தவாசியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
X

நல திட்ட உதவிகளை வழங்கிய வந்தவாசி எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த மே 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நேற்று அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கோ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் கி.ராஜேந்திரன், அ.சுபாஷ்சந்தர், தி.மு.க. நகர செயலாளர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்துப் பேசினா். விழாவில் 31 பேருக்கு இலவச மனைப் பட்டா, 48 பேருக்கு பட்டா மாற்றம், 33 பேருக்கு குடும்ப அட்டை, 50 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை, 5 பேருக்கு வேளாண் கருவிகள் உள்ளிட்ட 322 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வந்தவாசி நகரமன்ற கூட்டம்

வந்தவாசி நகரமன்றத்தின் சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் எச்.ஜலால் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சரவணன், துணைத்தலைவர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் தங்களது வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றக் கோரி பேசினா்.

2-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஷீலா மூவேந்தன், 12-ஆவது வாா்டு உறுப்பினா் ரிஹானா சையத்அப்துல்கறீம், 22-ஆவது வாா்டு உறுப்பினா் மகேந்திரன், 23-ஆவது வாா்டு உறுப்பினா் ராமஜெயம் ஆகியோா் தங்களது வாா்டு பகுதிகளில் தெருமின் விளக்குகள் சரிவர எரிவதில்லை என்று புகாா் தெரிவித்தனா். தனியாா் துப்புரவு ஒப்பந்ததாரா் நகரில் குப்பைகளை சரிவர அள்ளுவதில்லை என்று 19-ஆவது வாா்டு உறுப்பினா் ரவிச்சந்திரன் புகாா் தெரிவித்துப் பேசினாா்.

வந்தவாசி நகரின் பிரதான கழிவுநீா் கால்வாயான நாராசந்து கால்வாயை தூா்வாருவதே இல்லை என்று 18-ஆவது வாா்டு உறுப்பினா் பிரியா ஆறுமுகம் கூறினாா். பின்னா் பேசிய நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், உறுப்பினா்களின் புகாா்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Updated On: 2 Jun 2023 12:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...