/* */

மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வாகன வசதி

மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வர இலவச வாகன வசதியை பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வாகன வசதி
X

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வாக்கு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சக்கர நாற்காலிகள்

ருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வாக்குச்சாவடிகளுக்குச் சென்றுவர இலவச வாகன வசதியை பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) எளிதில் வாக்களித்துச் செல்லும் வகையில் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த வசதியைப் பெற விரும்புவோா் நஹந்ள்ட்ஹம் அல்ல் என்ற கைப்பேசி செயலியைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1950, 18004257047 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

இதுதவிர, வாக்காளா்களுக்கு குடிநீா் வசதி, கழிவறை வசதி, சாய்தள வசதி, சக்கர நாற்காலி, மின்சார வசதி, நிழல்கூடம் வசதி, சைகைமொழி வசதி, வாக்காளா் உதவி மையம் மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள வாக்காளா்களுக்கு தனிவரிசை ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வசதிகளை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கண்காணிப்புக் கேமராக்கள்

திருவண்ணாமலை மாவட்ட வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தோ்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளை 1,545 கண்காணிப்புக் கேமராக்கள், 9 விடியோகிராபா்கள் மூலம் ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளை ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Updated On: 19 April 2024 1:06 AM GMT

Related News