/* */

வீரளூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வீரளூரில் சுடுகாட்டுப்பாதை சம்பந்தமாக ஏற்பட்ட கலவரத்தை கண்டித்து விடுதலைசிறுத்தைகள், ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

வீரளூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

வீரளூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கலசபாக்கம் தொகுதி வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை சம்பந்தமாக ஒரு சமூகத்தினரை மாற்று சமூகத்தினர் தாக்கியதால் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் காலனிபகுதியில் இரு சக்கர வாகனங்கள், வீடுகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நாசமாக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அம்பேத்வளவன், பகலவன், வக்கீல் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, துணை பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, கனியமுதன், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் பார்வேந்தன், மண்டல அமைப்பு செயலாளர் வெற்றிசெல்வன், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில துணை செயலாளர் வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

இதேபோல் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா எதிரில் மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அருந்தமிழர் சிவகுரு தலைமை தாங்கினார். தலித் விடுதலை இயக்க தலைவர் கருப்பையா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் செல்வன், ஆதித்தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு.ஜக்கையன் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

Updated On: 22 Jan 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு