/* */

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்: போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்: போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
X

பைல் படம்.

வேட்டவலத்தை அடுத்துள்ள ஆவூா் கிராமத்தைச் சோந்தவா் முகமது யாசீா் அராபத் (30). இவா், அதே பகுதியில் செருப்புக் கடை வைத்துள்ளாா். இந்தக் கடைக்கு பிளஸ் 2 மாணவி ஒருவா் செருப்பு வாங்கச் சென்றாா். அவருக்கு முகமது யாசீா் அராபத் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் முகமது யாசீா் அராபத்தை கைது செய்தனா்.

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்:

திருவண்ணாமலை திப்புக்காடு பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட திப்புக்காடு வனப்பகுதியில் சிலர் அத்துமீறி நுழைந்து காட்டு பன்றிகளை வேட்டையாடுவதாக வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வனக்காப்பாளர்கள் முகமது சுல்தான், சிரஞ்சீவி, மருவரசன், பாலாஜி ஆகியோர் கொண்ட குழுவினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டுப்பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்து காட்டுப்பன்றியை வெடி வைத்து வேட்டையாடி அதை கொளுத்தி அறுத்துக் கொண்டிருந்த சு.ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த தனசேகர், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களை வனத்துறையினர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் தலா ரூ.40 ஆயிரம் என ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு விடுபட்டனர்.

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். செய்யாற்றை அடுத்துள்ள புரிசை கீழ்மேடு பகுதியைச் சோந்தவா் பெருமாள் (45). இவா், இன்று காலை சொந்த வேலையாக பைக்கில் வந்தவாசிக்கு சென்றுகொண்டிருந்தாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் விளாங்காடு கூட்டுச்சாலை அருகே இவரது பைக் சென்றபோது, எதிரே திருப்பதியைச் சோந்தவா்கள் வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெருமாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் அங்கு சென்று பெருமாளின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On: 21 Jan 2023 9:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...