/* */

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமி தரிசன நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமியையொட்டி தரிசன நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமி தரிசன நேரம் அறிவிப்பு
X

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது

வழக்கமாக சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்ல சுமார் 15 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால் நாளை மறுநாள் பக்தர்களின் வருகை கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சித்ரா பவுர்ணமியையொட்டி நாளை மறுநாள் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அன்று இரவு 11 மணி வரை நடை திறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்ய வசதியாக கட்டணமில்லா தரிசன சேவை வசதியும், சிறப்பு வழி தரிசனம் செய்ய விரும்புவோர் நலன்கருதி ரூ.50-க்கான கட்டண சேவை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிக அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் சாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனமும், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை வெயில் கொளுத்தி வருவதால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நடத்து செல்ல வசதியாக நடைபாதைகளில் நிழற்பந்தல்கள், மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மற்றும் தேங்காய் நார் தரைவிரிப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

3 இடங்களில் இளைப்பாறும் கூடங்களும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லாத சேவையாக பயன்படுத்தும் வகையில் தனித்தனியே குளியல் அறைகள், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கோபுரங்களின் நுழைவுவாயிலில் மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மூலம் தகுந்த கியூலைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மோர், பானகம் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவிலின் உட்புறத்திலும், நகரம் முழுவதிலும் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மலை சுற்றும் பாதையில் மின் விளக்குகள் அனைத்தும் தொடர்ந்து ஒளிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் சார்பாக கோவிலின் கிளிகோபுரத்தின் உட்புறம் கொடிமரம் எதிரில் உள்ள தீபதரிசன மண்டபத்தில் மருத்துவ துறையின் மூலம் அவசர கால மருத்துவ சிகிச்சை பிரிவு, ஆயிரங்கால் மண்டபம் எதிரில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மலை சுற்றும் பாதையில் பக்தர்கள் வசதிக்காக அவசர சிகிச்சை பிரிவு ஆகியவை 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் கிரிவலப்பாதையில் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தினால் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கிரிவலப்பாதையில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Updated On: 14 April 2022 5:05 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...