/* */

திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

DMK News Tamil -திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
X

திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்  எ. வ. வேலு சிறப்புரையாற்றினார்.

DMK News Tamil -திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் திராவிடம் மாடல் பயிற்சி பாசறை, திருவண்ணாமலை மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எழுச்சியாக ஏற்பாடு செய்வது , பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது , திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது திமுக தணிக்கை குழு உறுப்பினர் பிச்சாண்டி மற்றும் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட கழக செயலாளர் தரணி வேந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

செயற்குழு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர் , பொதுப்பணித்துறை அமைச்சருமான எ. வ. வேலு தீர்மானங்களை விளக்கி பேசும்போது, நமது மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பெருவாரியான அளவிற்கு ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் கழகத் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

சரியான நேரத்திற்கு அரங்கிற்கு வர வேண்டும். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்கள் பட்டியலை எனக்கு முன்னரே கொடுக்க வேண்டும். இந்த இயக்கம் பெரியார் காலத்தில் இருந்தே வருகின்ற இயக்கம் இது பகுத்தறிவு இயக்கம்.

உழைப்பவர்களை எங்கிருந்தாலும் நான் அடையாளம் கண்டு கொள்வேன் மாலை மரியாதை புகழ்ச்சி பேச்சாள் என்னை மயக்கிட முடியாது . பொது நிகழ்ச்சிகளில் காலில் விழும் செயலை தவிர்த்து இளைஞர் அணியினர் பகுத்தறிவுடன் வளர வேண்டும்

தமிழர் நாட்டிற்கு உகந்த மொழி தமிழ் தான் , ஆட்சி மொழி வேண்டும் என்றால் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வைத்து க் கொள்கிறோம். தமிழ்நாட்டில் என்றும் இரு மொழிக் கொள்கைதான் என்று பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்திலேயே அறிவித்தார். இதே இரு மொழி கொள்கைதான் தலைவர் கலைஞர் மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா அனைவரும் இரு மொழிக் கொள்கைகள் தான் ஏற்றுக்கொண்டனர்.

தமிழ் மொழி தான் பாடமாக இருக்க வேண்டும் வேறு மாநிலத்திற்கு வேறு நாட்டிற்கு செல்வதாக இருந்தால் ஆங்கிலம் இணைப்பு மொழியாக நமக்கு வேண்டும்.

டெல்லிக்கு சென்று பிழைப்பவர்களை விட. லண்டன் , ஜப்பான் , அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று பிழைப்பவர்கள் தான் அதிகம். அப்படிப்பட்ட இந்தியை திணிப்பதால் தமிழ்நாட்டிற்கு என்ன பலன்.

என் தாய்மொழி தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் , தாய்மொழி தான் பள்ளிக்கூடத்திலேயே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் , ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து இந்தியை திணிக்க பார்க்கிறார்கள் .

அதனால் இளைஞர் அணியினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் வளரும்போது கொள்கை பிடிப்புடன் வளருங்கள் அதுதான் வாழ்க்கைக்கு வெற்றியாக அமையும் என அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அண்ணாதுரை எம்பி , மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் , வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார், தலைமைக் கழக செயலாளர் ஸ்ரீதரன் , நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், விஜயலட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிய செயலாளர் நகரக் கழக செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை நகர இளைஞரணி அமைப்பாளரும் திருவண்ணாமலை நகர மன்ற துணைத் தலைவருமான ராஜாங்கம் நன்றி கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Oct 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  3. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  4. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  5. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  6. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  7. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  8. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  9. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!