/* */

நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு

நாமக்கல்ல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து ஒரு முட்டை விலை ரூ. 5 ஆனது

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
X

கோப்புப்படம் 

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மீண்டும் 20 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் விலை ரூ. 5 ஆக ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களில் முட்டை விலை 90 பைசா உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த மாதம் 22ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 29ம் தேதி முட்டை விலை 5 பைசா உயர்ந்து ரூ. 4.15 ஆனது. 30ம் தேதி மேலும் 5 பைசா உயர்ந்து ரூ. 4.20 ஆனது. 1ம் தேதி 20 பைசா உயர்ந்து ரூ. 4.40 ஆனது. 2ம் தேதி மீண்டும் 20 பைசா உயர்ந்து 4.60 ஆனது. 3ம் தேதி மேலும் 20 பைசா உயர்ந்து ரூ. 4.80 ஆனது. இந்த நிலையில் இன்று மாலை என்இசிசி மண்டல தலைவர் சிங்கரஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மீண்டும் 20 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை 5 நாட்களில் 90 பைசா உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 530, பர்வாலா 418, பெங்களூர் 490, டெல்லி 450, ஹைதராபாத் 445, மும்பை 495, மைசூர் 530, விஜயவாடா 450, ஹொஸ்பேட் 445, கொல்கத்தா 480.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 127 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 90 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

Updated On: 4 May 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.