/* */

இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து

இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டதால் , பொதுமக்கள் பக்தர்கள் ஏமாற்றம்

HIGHLIGHTS

இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
X

பைல் படம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்த ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.அண்மைக்காலங்களாக ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் அளவில் உயர்ந்துள்ளது.

கார்த்திகை தீபம் ,சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவர், மாத பௌர்ணமி அன்று சுமார் 5 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். மற்ற நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது குவிய துவங்கியுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை நகருக்கான ரயில்வே போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் விதமாக திருவண்ணாமலை-சென்னை இடையே தினசரி இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில் சேவையை, மீண்டும் இயக்க வேண்டும் என பக்தர்கள் அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து வேலூர் கண்ட்டோண்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, தினமும் திருவண்ணாமலை வரை நீட்டித்து கடந்த வாரம் தெற்கு ரயில் திருச்சி கோட்டம் உத்தரவிட்டது.

இந்த ரயில் சேவை இன்று (2ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை பீச் ஸ்டேஷனிலும், திருவண்ணாமலையில் நாளை (3ம் தேதி) அதிகாலை 4 மணிக்கும் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இதனால் பொதுமக்கள் பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், நிர்வாக காரணங்களால் அந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் நேற்று மாலை அறிவித்திருக்கிறது.

மேலும், மீண்டும் இந்த ரயில் சேவை எப்போது இயக்கப்படும் என்ற விபரமும் அதில் இடம் பெறவில்லை. இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்களும், பக்தர்களும் பெரிதும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

Updated On: 2 May 2024 1:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்