/* */

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை; பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கிராமங்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்

HIGHLIGHTS

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை; பொதுமக்கள் அவதி
X

பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கியது. தொடர்ந்து 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழகத்திற்கு ஒரே கட்டமாக நேற்று 19ஆம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது தமிழக முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை முதலே இரவு வரை விடிய விடிய ஏராளமான பொதுமக்கள் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்தனர்.


அவர்கள் சென்னை, பெங்களூர், கேரளா, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கூலி வேலைக்கு சென்றவர்கள் ஆவர்.

பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் வருகை தந்த பொதுமக்கள் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு ஒரே நேரத்தில் வருகை தந்து அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும் தமிழகத்தில் நேற்று விடுமுறை தினம் என்பதாலும் தொடர் விடுமுறை தினம் என்பதாலும் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பக்தர்களின் கூட்டமும் மிக அதிகமாக இருந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக கிராமப்புறங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்காததால் பேருந்து வசதி இல்லாத பொதுமக்கள் ஆட்டோ வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏறி சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வாக்களிக்க வந்த பொதுமக்கள் என ஏராளமானோர் குவிந்ததால் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அவதி அடைந்தனர்.

இது போன்ற நாட்களில் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 20 April 2024 11:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...