/* */

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் துவக்கம்

தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் இன்று காலை தொடங்கியது, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான  மகா தேரோட்டம் துவக்கம்
X

மகா தேரோட்டம் 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து டிசம்பர் 6ஆம் தேதி அன்று காலை 4 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

இந்த தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் இன்று காலை தொடங்கியது

இன்று அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் தேரோட்டம் தொடங்கியது. முதலாவதாக ஸ்ரீவிநாயகர் தேரோட்டம் தொடங்கியது.

வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகபெரும் தேர் இரண்டாவதாகவும் புறப்படும். 3வதாக பெரிய தேர் எனப்படும் அருணாசலேஸ்வரர் தேரும், 4வதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தியம்மன் தேரும், 5வதாக சிறுவர்கள் மட்டுமே இழுக்கும் சண்டிகேஸ்வரர் தேரும் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட உள்ளன.

ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு, அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் சுமார் 16 மணி நேரம் தொடர்ச்சியாக இரவு வரை நடைபெறும்.

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தேர்த்திருவிழாவை காண இங்கு குவிந்து வருகின்றனர். பக்தர்களின் உணவு, பாதுகாப்பு, தங்குமிடம் இவைகளை கண்காணிக்க 3000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 5 Dec 2022 4:39 AM GMT

Related News