/* */

வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவினை கலெக்டர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
X

முதல் முறை வாக்காளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட மாவட்ட கலெக்டர்

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அதையொட்டி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

முதல் முறை வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற காலையிலிருந்து ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்..

திருவண்ணாமலை நகராட்சி தியாகி அண்ணாமலை பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு செய்து முதல் முறை வாக்களிக்க வந்த முதல் முறை வாக்காளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அப்பள்ளியில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவினை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியின் மூலம் அழைத்து வரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு மேலும் ஜனநாயக கடமையாற்ற வந்திருந்து வாக்குப்பதிவினை செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மேலத்திக்கான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை எஸ்ஆர் ஜிடிஎஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் மூன்றாம் பாலினத்தவர் வாக்களிப்பதை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பாஸ்கர பாண்டியன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு அப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவியலை ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த பொதுமக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

திருவண்ணாமலை கலந்தபூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க கைக்குழந்தைகளுடன் வந்திருந்த நரிக்குறவர்கள் இனத்தைச் சார்ந்த மக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ,தேர்தல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 20 April 2024 2:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது