/* */

ஆசிரியர்கள் சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்

ஆசிரியர்கள் சமுதாயப் பணியும், மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தையும் கொண்டு வர வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் கூறினார்

HIGHLIGHTS

ஆசிரியர்கள் சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்
X

சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் முத்து தலைமை வகித்தார். பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆனந்தராஜ் வரவேற்றார்.

முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆசிரிய ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி பேசுகையில், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகளை கொடுத்து ஒழுக்கம் நிறைந்தவர்களாக மாற்ற பாடுபடவேண்டும் என்றார்.

மேலும் இன்றைய சூழலில் இணையவழி கற்றல் சவால்களும் தீர்வுகளும் மற்றும் குறுந்தொழில் கல்வி முறையில் ஏற்பட்ட சவால்களும் எதிர்வினையும் என்ற தலைப்புகளில் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் திருவண்ணாமலை வேலூர் ,விழுப்புரம், கடலூர் ,கள்ளக்குறிச்சி, மாவட்டங்களை சேர்ந்த 273 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Updated On: 27 Dec 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  2. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  3. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  4. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...
  5. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  6. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  7. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  8. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  9. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  10. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...