/* */

தாட்கோ பயனாளிகள் நிலுவைத் தொகையை செலுத்தி வட்டி தள்ளுபடியை பெற அழைப்பு

தாட்கோ மூலம் கடனுதவி பெற்ற பயனாளிகள் தங்களது நிலுவைத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தி வட்டி, அபராத வட்டி தள்ளுபடியை பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தாட்கோ பயனாளிகள் நிலுவைத் தொகையை செலுத்தி வட்டி தள்ளுபடியை பெற அழைப்பு
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடனுதவி பெற்ற பயனாளிகள் தங்களது நிலுவைத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தி வட்டி, அபராத வட்டி தள்ளுபடியை பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்,

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோா் நிதி வளா்ச்சிக் கழகம், தேசிய துப்புரவுத் தொழிலாளா் நிதி மற்றும் வளா்ச்சிக் கழகம் போன்ற கடனுதவி திட்டங்களில் 1990-91 முதல் 2011-12 வரை கடனுதவி பெற்ற பயனாளிகள் தங்களது அசல் தொகையைச் செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

எனவே, கடனுதவி பெற்ற பயனாளிகள் தங்களது கடன் தொகைகளை ஒரே முறையில் செலுத்தி நோ செய்து வட்டி, அபராத வட்டி தள்ளுபடியை பெற்றுப் பயன்பெறலாம்.

மேலும், கடன் தொகை நிலுவையில்லா சான்றிதழையும் உடனே பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டம் 31.12.2023 வரை அமலில் இருக்கும் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்,

வங்கி பணிக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான ஆதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்களும் வருகிற 27-ந் தேதிக்குள் (புதன்கிழமை) bank.sbi/careers/current-openings என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இப்பதவிக்கான தேர்வு முறையானது முதற்கட்டத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் மற்றும் குழுப் பயிற்சிகள் என 3 நிலைகளில் நடக்கிறது. முதற்கட்ட தேர்வு வருகிற நவம்பர் மாதத்திலும், முதன்மை தேர்வு டிசம்பர் மாதத்திலும், நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகளுக்கான அழைப்பு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திலும் நடைபெறுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் துணை மேலாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சியை வழங்க தாட்கோ நிறுவனமானது முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இப்பயிற்சி வகுப்புக்கான கட்டணம் தாட்கோ மூலம் ஏற்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Sep 2023 1:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...