/* */

தரமற்ற உணவு: திருவண்ணாமலையில் விடுதி மாணவர்கள் சாலை மறியல்

தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக்கூறி, திருவண்ணாமலையில், விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தரமற்ற உணவு: திருவண்ணாமலையில் விடுதி மாணவர்கள் சாலை மறியல்
X

தரமற்ற உணவு வழங்கப்படுவதாக விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை ராகவேந்திரா நகரில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. அதில் 45-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். விடுதியில் அவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுவது வழக்கம். விடுதி காப்பாளர் மாணவர்களுக்கு உணவை முறையாக வழங்கவில்லை என்றும், உணவு தரமாக வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவர்கள் பலமுறை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை. ஆவேசமடைந்த விடுதி மாணவர்கள் திருவண்ணாமலை - வேட்டவலம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் நீடித்த சாலை மறியலால், அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 30 Dec 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...