/* */

தேனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயபரிசோதனையின் தொடர்ச்சி: டிடிவி தினகரன்

தேனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயபரிசோதனையின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்

HIGHLIGHTS

தேனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயபரிசோதனையின் தொடர்ச்சி:  டிடிவி தினகரன்
X

டிடிவி தினகரன்

அதிமுகவில் சசிகலாவையும் தன்னையும் சேர்ப்பது தொடர்பாக, தேனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயபரிசோதனையின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆரணியில் இன்று நடைபெற்ற அமமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலைக்கு வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது: "அதிமுகவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ஒரு கட்சியின் உட்கட்சி பிரச்சினையை எட்டிப் பார்த்து கருத்து சொல்ல, நான் விருப்பப்படவில்லை.

தேனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அமமுக மற்றும் எனது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது சுய பரிசோதனையின் தொடர்ச்சியாக இருக்கலாம். ஒட்டுமொத்தமாக, அக்கட்சி ஒருமித்த கருத்தாக முடிவெடுத்து தெரிவித்த பிறகுதான், பதில் தெரிவிக்க முடியும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ளன. காலம், சரியான நிலையை உருவாக்கும். மக்கள் விரோத திமுக ஆட்சியை முறியடிப்போம். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு குறித்து எனக்கு ஆரூடம் சொல்ல தெரியாது. வாக்கு எண்ணிக்கை வரை காத்திருக்கலாம்.

உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள தமிழக மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும், பாதுகாப்பாக மீட்டு, உயிர் சேதம் இல்லாமல் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் மக்களை வதைக்கும் வேலையை தி.மு.க அரசு ஆரம்பித்திருக்கிறது.. சாமானிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என்றார்.

Updated On: 4 March 2022 1:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?