/* */

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது

HIGHLIGHTS

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில் 5 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தீவிர போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை நமது இந்திய திருநாட்டில் இருந்து அறவே ஒழித்திடும் பொறுத்து கடந்த 28 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடைபெற்று வருகிறது.

29 ஆவது ஆண்டாக இம் முகம் நாளை மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

இந்த தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மூலம் நம் நாட்டில் பெருமளவில் போலியோ நோய் தாக்கம் குறைக்கப்பட்டு தற்சமயம் அந்த நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளோம்.

5 வயது குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்னரே போலியோ சொட்டு மருந்து அளித்து இருப்பினும் நாளை ஞாயிற்றுக்கிழமை இலவசமாக சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1992 முகாம்களில் 7103 பணியாளர்கள் மூலமாக இம் முகாம் செயல்பட உள்ளது. இவர்கள் முகாம் நடைபெறும் நாள் அன்று அந்தந்த முகாம்களிலேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பார்கள். மறுநாள் முதல் பணியாளர்கள் வீடு வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிப்பார்கள்.இப்பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முகாம்கள் மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதுடன் புகைவண்டி நிலையம், பேருந்து நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் நடமாடும் முகாம் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர தொலைதூரத்தில் உள்ள எளிதில் செல்லக்கூடிய இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ஒரு குழந்தை கூட விடுபடாது, அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, எனவே பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயினை ஒழிப்பதற்கு ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 2 March 2024 1:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  3. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  5. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  8. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!