/* */

பாமக வளர்ச்சி குறித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை

பாமகவை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் கேட்டுக் கொண்டார்

HIGHLIGHTS

பாமக வளர்ச்சி குறித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை
X

திருவண்ணாமலை மாவட்ட பாமக   வளர்ச்சி பணிகள் குறித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை 

பாமகவின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாமக செயல்பாடுகள் குறித்தும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.

கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து மருத்துவர் இராமதாஸ் நடத்தி வரும் தொடர் ஆலோசனைகளில் இது மூன்றாவது கலந்தாய்வுக் கூட்டம் ஆகும். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பொருளாளர் திலகபாமா, இணைப் பொதுச் செயலாளர் இசக்கி படையாட்சி, அமைப்பு செயலாளர் செல்வக்குமார், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் கணேஷ்குமார், மாவட்ட தலைவர்கள் அ.ம. கிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியை வளர்த்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் ஆலோசனைகளை வழங்கினார்.

பாமகவின் அனைத்து நிலை நிர்வாகிகளின் உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பு உணர்வு உள்ளிட்டவற்றை பாராட்டிய இராமதாஸ், 'அனைத்து நிலைகளிலும்பாமகவை வலுப்படுத்த வேண்டும். அதற்காக மக்களை சந்திக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Updated On: 28 Feb 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?