/* */

திருவண்ணாமலையில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க பா.ம.க. தீர்மானம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க பா.ம.க.  தீர்மானம்
X

பா.ம.க. ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணை பொது செயலாளர்கள் இரா.காளிதாஸ், அ.வே.பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.முருகன் வரவேற்றார்.

சி'றப்பு அழைப்பாளர்களாக தலைமை பொறுப்பாளர்கள் பொன்.கங்காதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வெங்கட்ராமன், தர்மபுரி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்களையும், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் புதிய பொறுப்பாளர்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்களையும் பெற்றுக் கொண்டனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் மனுக்களை வழங்கினர்.

கூட்டத்தில் வருகிற 2026-ம் ஆண்டு தமிழகத்தில் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராக பா.ம.க. கொள்கைகளை விளக்கி நகர மற்றும் கிராம மக்களிடையே திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்.

திருவண்ணாமலையில் திறக்கப்படாமல் இருக்கும் ரெயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாயுடுமங்கலத்தில் அகற்றப்பட்ட வன்னியர்களின் அடையாள சின்னமான அக்னி குண்டத்தை அதே இடத்தில் நிறுவ அனுமதி மறுக்கப்பட்டால் 100 இடங்களில் அக்னிகுண்டத்தை வைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திரளான பா.ம.க.வினர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை நகர செயலாளர் பத்மநாபநாயுடு நன்றி கூறினார்.

Updated On: 11 March 2022 11:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...