/* */

விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தமிழக வீரர்களின் புகைப்பட கண்காட்சி

செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வீரர்களின் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் எ.வ. வேலு துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தமிழக வீரர்களின் புகைப்பட கண்காட்சி
X

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். 

75-வது சுதந்திர தின விழா, அமுதப் பெருவிழாவாக மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் விடுதலை போராட்டத்தில் பங்குப்பெற்ற தமிழக வீரர்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு துறை பணி விளக்க கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் சதீஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் விடுதலை போராட்டத்தில் பங்குப்பெற்ற தமிழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விடுதலை போராட்ட தியாகிகள், தலைவர்களின் புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் ஊரக வளர்ச்சித்துறை, ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் மாதிரி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஆவின், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உள்ளிட்ட துறைகள் மூலம் பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகளில் துறைகளின் செயல் விளக்கங்கள் குறித்து மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை எந்திரமயமாக்கும் குறு இயக்கம் திட்டத்தின் கீழ் 2 டிராக்டர்கள் அரசு மானியத்துடன் ரூ.7 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிக்கையாளர் ஒருவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியின் கீழ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முரளி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சோமசுந்தரம், ஆவின் பொது மேலாளர் ராஜ்குமார், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி செயற் பொறியாளர் அறிவழகன், வேளாண்மைத்துறை இயக்குனர் முருகன், கூட்டுறவு இணைப்பதிவாளர் நடராஜன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 March 2022 1:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!