/* */

மக்கள் குறை தீர்வு கூட்டம்: சகோதரர்கள் தீக்குளிக்க முயற்சி

Public Grievance -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தீர்வு கூட்டத்தின் போது சகோதரர்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

மக்கள் குறை தீர்வு  கூட்டம்: சகோதரர்கள் தீக்குளிக்க முயற்சி
X

மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்.

Public Grievance -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில். பொதுமக்களிடமிருந்து 650 மனுக்கள் வர பெற்றன. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்து முதியோர், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ மாணவிகளிடமிருந்து, கல்வி உதவித்தொகை , இலவச மனை பட்டா, வங்கிக் கடன் ,உதவி முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்று ,வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 650 மனுக்கள் வர பெற்றன.

இந்த மனுக்கள் மீதும் ஏற்கனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் துணை ஆட்சியர்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த சில வாரங்களாக சிலர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோன்று இந்த வாரமும் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது யாரும் தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற செயலில் ஈடுபடாமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் கலெக்டர் முருகேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து நுழைவு வாயில் பகுதி, வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் பகுதி போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்த சில நிமிடங்களில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கட்டைய கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், சேகர். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 1996-ம் ஆண்டு எங்கள் பகுதியில் ஒரு ஏக்கர் 76 சென்ட் விளை நிலத்தை கிரயமாக வாங்கினோம். அந்த நிலத்தை சகோதரர்களாகிய நாங்கள் பாகப்பிரிவினை செய்யும் போது, அதில் 0.50 ஏக்கர் நிலம் விற்ற நபரின் பெயரிலேயே இருந்துள்ளது.

இதுகுறித்து அவரிடம் கேட்டால் தற்போது அந்த இடத்தின் மதிப்பு கூடி உள்ளதாக கூறி அதற்கான பணத்தை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் நிலத்தை கொடுக்க முடியாது என கொலை மிரட்டல் விடுக்கிறார்.

அதனால் தங்கள் நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Sep 2022 7:10 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்