/* */

நாமக்கல் நாமகிரித்தாயார் கோவிலில் 26-ம் தேதி நவராத்திரி விழா துவக்கம்

நாமக்கல் நாமகிரித்தாயார் கோவிலில் 26-ம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் நாமகிரித்தாயார் கோவிலில் 26-ம் தேதி நவராத்திரி விழா துவக்கம்
X

பைல் படம்.

நாமக்கல் கோட்டையில் ஒரே கல்லினால் உருவான மலையின் மேற்குப்பகுதியில், அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மசுவாமி திருக்கோவில் குடவறைக்கோயிலாக அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 26ம் தேதி திங்கள்கிழமை நவராத்திரி விழா துவங்குகிறது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்ப அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். 26ம் தேதி மச்சாவாதாரம், 27ம் தேதி கூர்மாவதாரம், 28ம் தேதி வாமனாவதாரம், 29ம் தேதி ரங்கமன்னார் திருக்கோலம், 30ம் தேதி ராமாவதாரம், அக்.1ம் தேதி கிருஷ்ணாவதாரம், 2ம் தேதி மோகன அவதாரம், 3ம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு ராஜாங்க சேவை அலங்காரம் நடைபெறும். அக்.4ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு அருள்மிகு அரங்கநாதசாமியும், நரசிம்மசுவாமியும் கமலாலயக்குளக்கரையில் எழுந்தருளி அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெறும். 5ம் தேதி புதன்கிழமை பரமபதநாதன் அலங்காரம் மற்றும் 6ம் தேதி விசேச சேவை அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் இளையராஜா, தக்கார் ரமேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.

Updated On: 19 Sep 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  3. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  6. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்