/* */

திருவண்ணாமலையில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும்.மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தை பொறுத்தவரையில் 91 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கடந்த ஓரிரு நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒமிக்ரான் பாதித்த 3 நபர்களை கண்டு தொற்று பரவாமல் பாதுகாத்ததால் ஒமிக்ரான் அதிகம் பரவாமல் கட்டுக்குள் வந்தது, என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக கல்வி உதவிகாட்டி மையம் எண்- 14417, குழந்தைகள் உதவி எண்-1098 அடங்கிய முத்திரையினை பள்ளி மாணவிகளின் புத்தகத்தில் அச்சிட்டு தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் 34 ஆயிரத்து 331 மாணவர்களும், 11-ம் வகுப்பில் 30 ஆயிரத்து 880 மாணவர்களும், 12-ம் வகுப்பில் 29 ஆயிரத்து 756 மாணவர்களும் என 94 ஆயிரத்து 967 மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!