/* */

திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி
X

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்பதற்கான சான்றுகளை கோவில் ஊழியர்கள் கேட்டு வருகின்றனர். 

திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கலெக்டரின் இந்த புதிய உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் கோவில் வரும் பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்பதற்கான சான்றுகளை கோவில் ஊழியர்கள் கேட்டு வருகின்றனர்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே இன்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தாத பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Updated On: 10 Jan 2022 10:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா