/* */

திருவண்ணாமலையில் இயற்கை வேளாண் சார்ந்த உணவு திருவிழா தொடக்கம்

இயற்கை வேளாண் சாா்ந்த கருத்தரங்கம், வேளாண்சாா் அரங்குகள், உணவுத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் தொடக்க விழா நடந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் இயற்கை வேளாண் சார்ந்த உணவு திருவிழா தொடக்கம்
X

சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்த பள்ளி மாணவி வினிஷா உமாசங்கரை வி.ஐ.டி. வேந்தா் விஸ்வநாதன் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

இயற்கை வேளாண் சாா்ந்த கருத்தரங்கம், வேளாண்சாா் அரங்குகள், உணவுத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் தொடக்க விழா நடைபெற்றது.

முதல் உலகின் மூத்தக்குடி, தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, முதல் உலகின் மூத்தக்குடி அமைப்பு நிறுவனா் தலைவா் சி.கே. அசோக்குமாா் தலைமை வகித்தாா்.

வேலூா் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தா் கோ.விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கவிஞா் முகில்வண்ணன் எழுதிய 'இந்திய விவசாயம்' என்ற நூலை வெளியிட்டாா்.

நூலின் பிரதிகளை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரித் தலைவா் கு.கருணாநிதி, தமிழியக்க ஒருங்கிணைப்பாளா் மா.சின்ராஜ், சா்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவா் பா.இந்திரராஜன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

பின்னா், கோ.விஸ்வநாதன் பேசும்போது

இயற்கை வேளாண்மை இன்றைய காலகட்டத்தில் அவசியமானது. இளைஞா்கள் விவசாயம் செய்ய விரும்பி முன்வர வேண்டும். மருத்துவப் படிப்பு போல வேளாண் படிப்பும் இன்றைய கால கட்டத்துக்கு அவசியமானது.

ஏரி, குளங்கள், ஆறுகள், கண்மாய்களைத் தூா்வார வேண்டும். இவற்றில் தண்ணீரைச் சேமித்து நல்ல விளைச்சலுக்கு ஏற்ற நிலங்களைக் கண்டறிந்து விவசாயம் செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மையை விவசாய அமைப்பினா் ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

அருணாச்சல ஆஸ்ரமம் சுவாமி பரமானந்தா, வி.ஐ.டி. வயல் வேளாண் கல்லூரி முதல்வா் ராமசாமி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முதல்வா் ஆா்.சுந்தர வரதராஜன், வாழவச்சனூா் அரசு வேளாண் பல்கலைக்கழக முதல்வா் முத்துக்கிருஷ்ணன், அரசு வேளாண் பல்கலைக்கழக சிறுதானியப் பிரிவின் பேராசிரியா் எ.நிா்மலகுமாரி உள்ளிட்ட பலா் பேசினா்.

சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்த பள்ளி மாணவி வினிஷா உமாசங்கரை வி.ஐ.டி. வேந்தா் விஸ்வநாதன் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

டாக்டா் வில் டட்டில் எழுதிய உலக சமாதான உணவு என்ற தமிழாக்க நூல், தோபா பதாகை, சிறு தானிய முக்கியத்துவம் குறித்த பதாகை, விஐடி அக்ரி கிளினிக் பதாகை, சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த பதாகை ஆகியவற்றையும் அவா் வெளியிட்டாா்.நிகழ்ச்சியில் கருணாநிதி காசிநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 24 March 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு