/* */

இல்லந் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம் நிகழ்ச்சி!

திருவண்ணாமலையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

இல்லந் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம் நிகழ்ச்சி!
X

வியாபாரிகளிடம் திமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கிய மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் கம்பன்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ. வ. வே.கம்பன், தேர்தல் பொறுப்பாளர் மருத்துவர் மாலதி நாராயணன் ஆகியோர் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தனர்.

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்னும் திண்ணைப் பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும் என்ற கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்களின் ஆணையினை ஏற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படியும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் இந்த பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை தேரடி வீதி, காய்கறி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் அருகே, வேங்கி கால் பகுதி, ஜெய் பீம் நகர் தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள காய்கறி வியாபாரம் செய்யும் மகளிர், மற்றும் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ள நல திட்டங்கள் குறித்தும் பிரச்சாரம் செய்தனர்.

மேலும் திருவண்ணாமலை நகரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் திண்ணைப் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், மாவட்ட அணி அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், , ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்தனர்.

Updated On: 27 Feb 2024 2:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை