/* */

காணாமல் போன 100 செல்போன்கள் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் காணாமல் போன 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

HIGHLIGHTS

காணாமல் போன 100 செல்போன்கள் மீட்பு
X

உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைத்த மாவட்ட எஸ்பி

திருவண்ணாமலை மாவட்டத்தில் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஒப்படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனதாக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் மீது மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கடந்த அக்டோபர் மாதம் முதல் கடந்த மே மாதம் வரை காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 100 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் ஆகும்.

இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்ட 100 செல்போன்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி முன்னிலை வகித்தார். காவல் ஆய்வாளர் முருகானந்தம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செல்போன்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் வழங்கி பேசுகையில், பொதுஇடங்களுக்கும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் செல்லும் போதும் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. யாரிடமும் செல்போன் எண், ஓ.டி.பி. எண், ஆதார் எண் போன்றவற்றை தெரிவிக்க கூடாது. தெரியாத எண்ணில் இருந்து வரும் இணையதள லிங்க்குகளை தொடக் கூடாது. இதன் மூலமும் பணம் பறிபோகக் கூடும்.

தங்களின் உடைமைகள் எந்த இடத்தில் இருந்தாலும் அவற்றின் மீது கவனத்தை வைத்து கொள்ள வேண்டும். காணாமல் போன செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மிகவும் சிரமப்பட்டு கண்டுபிடித்து கொடுத்து உள்ளனர். மேலும் ஏ.டி.எம். கார்டு, ஜி- மெயில், பேஸ்புக், நெட் பேங்க் ஆகியவற்றின் பாஸ்வேர்டை (ரகசிய எண்) வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். மேலும் பணம் பரிவா்த்தனை தொடர்பான குற்றங்கள் ஏதேனும் நடந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற கட்டணமில்லா செல்போன் எண்ணிற்கு தெரிவிக்க வேண்டும். அதன்மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்

நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீசார் மற்றும் செல்போன்களின் உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Jun 2023 2:20 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  3. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  4. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  5. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  10. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...