/* */

பொது சுகாதாரத் துறையின் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்கள்

பொது சுகாதாரத்துறை அரசு புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் கலைஞரின் வரும் முன்காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

பொது சுகாதாரத் துறையின் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்கள்
X

அடி அண்ணாமலையில் புதிய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள் 

திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் பொது சுகாதாரத்துறை அரசு புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் கலைஞரின் வரும் முன்காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தொடக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை ஒன்றியம் அடிஅண்ணாமலையில் நடைபெற்றது.

துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் வரவேற்றார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், பொதுப்பணி நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு நத்தம் பூண்டி, அரட்டவாடி, பரமனந்தல், ஆரணி, தச்சூர் உள்ளிட்ட இடங்களில் ரூபாய் 1.50 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தனர் மேலும் ரூபாய் 78 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள எட்டு பணிகளையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் வேலு பேசியதாவது;

மக்கள் நலம் பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் உத்தரவுப்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு நடைபெற்று வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் வீடுகளுக்கு நேரில் தேடிச்சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உலகத்திலேயே இல்லாத வகையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார். மேலும் நம்மை காக்கும் 48 என்ற திட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. வட மாவட்டங்களிலேயே பெரிய மாவட்டம் திருவண்ணாமலை. இது 8 தொகுதிகளை கொண்டு உள்ளது. எனவே, தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் தினமும் 7 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய் சிறப்பு பிரிவு தொடங்க ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே தாய் சேய் நல கட்டடம் ரூபாய் 12 கோடியில் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்து முடிந்த தீபத் திருவிழாவில் 35 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இவ்விழா நடந்து முடிந்ததால் முதலமைச்சர் மகிழ்ச்சி அடைந்து உள்ளார். அமைச்சர் வேலு இவ்விழா குறித்து பல்வேறு கூட்டங்களை நடத்தியதால் தான் விழா இவ்வாறு சிறப்பாக நடந்து முடிந்து உள்ளது.

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் என 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் 71 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு சார்பில் 36-ம், தனியாரில் 34-ம், இ.எஸ்.ஐ.யில் ஒன்றும் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. மருத்துவம் பயில்பவர்களின் எண்ணிகையிலும் தமிழகம் தான் முதலிடம் வகிக்கின்றது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏ.கே. படவேடு ஆரம்ப சுகாதார நிலையமும் அடங்கும்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 99 லட்சத்து 31 ஆயிரத்து 961 நபர்களுக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்து மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 லட்சத்து 63 ஆயிரத்து 32 பேருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் ஒரு கோடியாவது பயனாளிக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் வழங்கும் விழாவை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து திட்டங்களிலும் திருவண்ணாமலை மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்கின்றது என்றார்.

விழாவில் 20 துறைகள் சார்பில் 2,120 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

விழாவில் அண்ணாதுரை எம்பி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, ஜோதி ,சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Dec 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?