/* */

கடந்த ஆட்சியில் எந்தவித நல பணிகளும் மேற்கொள்ளவில்லை: அமைச்சர் குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித மக்கள் நலப் பணிகளும் மேற்கொள்ளவில்லை, அமைச்சர் வேலு குற்றஞ்சாட்டினாா்.

HIGHLIGHTS

கடந்த ஆட்சியில் எந்தவித நல பணிகளும் மேற்கொள்ளவில்லை: அமைச்சர் குற்றச்சாட்டு
X

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடையூா், அத்தியந்தல் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடையூா், அத்தியந்தல் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆடையூா், அத்தியந்தல் ஊராட்சிகளைச் சோந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரில் கேட்டுப் பெறும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, அண்ணாதுரை எம்.பி., கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டா- சிட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் வேலு , அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது: ஆடையூா், அத்தியந்தல் ஊராட்சிகளில் ரூ.ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அத்தியந்தல் மற்றும் ஆடையூர் ஊராட்சிகளில் 15-வது நிதி குழுவிலிருந்து குடிநீர் குழாய், கழிவுநீர் பக்க கால்வாய், பள்ளி கூடுதல் வகுப்பறைகள், பண்ணை குட்டைகள், அங்கன்வாடி புதிய கட்டிடம், சிமெண்டு சாலை பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறார்.செப்டம்பா் 15-ஆம் தேதி மகளிா் உரிமைத் தொகைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். திருவண்ணாமலை வட்டம், தச்சம்பட்டில் மகளிா் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.

எனவே அன்றைய தினம் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. அதில் இருந்து 15 நாட்களுக்குள் குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். இதில் யாருக்காவது உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றால் வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று முறையிடலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித மக்கள் நலப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் தற்போது ஆட்சி பொறுப்பேற்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தான் மக்கள் நலனில் அக்கறைக்காட்டி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வருவாய்த் துறையின் மூலம் முகாமில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிதாக நீர் தேக்கத்தொட்டி, கழிவறை வசதி, தெருவிளக்கு அமைத்து தருதல், வேலைவாய்ப்பு, காதொலி கருவி, மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த மனுக்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு கட்டாயம் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் மந்தாகினி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட கவுன்சிலர் சரவணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.

Updated On: 12 Sep 2023 12:59 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  2. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  3. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  4. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  5. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  6. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  9. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை