/* */

திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி நான்கு வழி சாலை பணிகள் துவக்கம்

கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி நான்கு வழி சாலை பணிகள் துவக்கம்
X

நான்கு வழி சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்தும் பணி துவக்க விழா திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மெய்யூர் ஊராட்சியில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகித்தார் .நெடுஞ்சாலை பராமரிப்பு தலைமை செயற்பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ராஜன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ. வ. வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை இருவழி சாலையை நான்கு வழி சாலையாக ரூபாய் 121 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை செய்து பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், தமிழ்நாட்டில் விபத்து எங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க அனைத்து சாலைகளும் தரமாகவும் முழுமையாகவும் போடப்பட்டு வருகிறது. இரு வழி சாலைகளில் பல்வேறு இடங்களில் தடுப்பில்லாததால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. ஆகையால் தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க இரு வழி சாலைகள் அனைத்தையும் நான்கு வழி சாலையாக மாற்றி சாலைகள் போடும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதல்வரின் ஆணையை ஏற்று தனது கடமையை தான் செய்து வருகிறேன், தமிழ்நாடு முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் 2200 கிலோமீட்டர் சாலையை நான்கு வழி சாலை ஆகவும் 6700 கிலோ மீட்டர் சாலைகளை இரு வழி சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டதன் பேரில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையே உள்ள சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

கிராமங்களுக்கு புறவழி சாலைகள் அமைக்கும் பணிகளும் தமிழக அரசின் சார்பில் தற்போது நடைபெற்று வருகிறது. மனித உயிர் என்பது விலை மதிக்க முடியாதது, அதனை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இருவழி சாலைகளையும் நான்கு வழி சாலைகளாக மாற்ற திட்டம் தீட்டி பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அரசுத்துறை அதிகாரிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 March 2024 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  2. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  3. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  7. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  9. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  10. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்