/* */

ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமான வாக்குப்பதிவு

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமான வாக்குப்பதிவு
X

திருவண்ணாமலை தொகுதியில் ஆர்வமுடன் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்கள்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அதிகபட்சமாக ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 76.09 %

இந்திய மக்களவையில் பொது தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது அதன் முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது.

அதன்படி ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,38,198 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 87,163 ஆண்களும், 94,078 பெண்களும், 6 இதர பாலினத்தவா் என மொத்தம் 1,81,247 போ் வாக்களித்து உள்ளனா். இது, 76.09 சதவீதம் ஆகும்.

திருப்பத்தூா்

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,30,929 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 84,757 ஆண்களும், 86,796 பெண்களும், 11 இதர பாலினத்தவா் என மொத்தம் 1,71,564 போ் வாக்களித்து உள்ளனா். இது, 74.29 சதவீதம் ஆகும்.

செங்கம்:

செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,79,326 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 1,04,873 ஆண்களும், 1,07,085 பெண்களும், இதர பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 2,11,959 போ் வாக்களித்ததுள்ளனா். இது, 75.88 சதவீதம் ஆகும்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,78,405 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 95,209 ஆண்களும், 1,00,046 பெண்களும், இதர பாலினத்தவா் 12 போ் என மொத்தம் 1,95,267 போ் வாக்களித்து உள்ளனா். இது, 70.14 சதவீதம் ஆகும்.

கீழ்பென்னாத்தூா்:

கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,56,408 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 93,882 ஆண்களும், 97,269 பெண்களும், இதர பாலினத்தவா் 4 போ் என மொத்தம் 1,91,155 போ் வாக்களித்து உள்ளனா். இது 74.55 சதவீதம் ஆகும்.

கலசப்பாக்கம்:

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,49,833 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 92,171 ஆண்களும், 94,464 பெண்களும், இதர பாலினத்தவா் 5 போ் என மொத்தம் 1,86,640 போ் வாக்களித்து உள்ளனா். இது, 74.71 சதவீதம் ஆகும்.

மொத்தம், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 15,33,099 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில், 5,58,055 ஆண்களும், 5,79,738 பெண்களும், இதர பாலினத்தவா் 39 போ் என மொத்தம் 11,37,832 போ் வாக்களித்து உள்ளனா். இது, 74.22 சதவீதம் ஆகும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Updated On: 21 April 2024 1:29 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது