/* */

திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை நகருக்கான ஒட்டுமொத்த தூய்மை பணி

நகராட்சி நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை சார்பில் "என் குப்பை, என் பொறுப்பு" என்னும் திட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த தூய்மை பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை நகருக்கான ஒட்டுமொத்த தூய்மை பணி
X

தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்

திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது. திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட முத்துவிநாயகர் கோவில் தெருவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை சார்பில் "தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என் குப்பை, என் பொறுப்பு" என்னும் திட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த தூய்மை பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார். தூய்மை பணியை தி.மு.க. நகர செயலாளரும், தூய்மை அருணை மேற்பார்வையாளருமான கார்த்தி வேல்மாறன் தொட்ங்கி வைத்து பேசுகையில் மக்களின் பங்களிப்புடன் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளுதல் , திருவண்ணாமலை நகரம் முழுவதும் கடைகளில் குப்பைகளை தினசரி வாகனம் மூலம் பெற்று வருதல், ஒவ்வொரு தெருக்களிலும் வாகனங்கள் மூலம் குப்பைகளை பொதுமக்கள் இடையே நேரடியாக சென்று பெறுதல் என பல பணிகளை திருவண்ணாமலை நகராட்சி சிறப்பாக செய்து வருகிறது.

மேலும் மருந்து பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள், பயனற்ற பொருட்கள், பழைய பேப்பர்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பொதுமக்கள் வணிகர்கள் தங்களிடம் உள்ள தேவையற்ற பொருட்களை ஈசானியம் குப்பை கிடங்கு, நகராட்சி வளாகம் ஆகிய இடங்களில் உள்ள மைதானத்தில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஒப்படைத்து நகரின் தூய்மை காக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் , நகர மன்ற உறுப்பினர்கள் ராணி முருகன், உதய ரவி நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சக்திவேல் மால்முருகன், நகரமன்ற உறுப்பினர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் உள்பட நகராட்சி பணியாளர்கள், தூய்மை அருணை காவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக "தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என் குப்பை, என் பொறுப்பு" என்னும் திட்டத்திற்காக உறுதி மொழியை ஏற்று கொண்டனர்.

Updated On: 11 Jun 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  5. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  6. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  7. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  10. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...