/* */

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது

தமிழக அரசின் மணிமேகலை விருதுகள் பெற மகளிர் சுய உதவி குழுக்களுக்குவிண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் வட்டார அளவிலான கூட்டமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், கிராம புற மகளிர் சுய உதவி குழுக்கள், நகர அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு செயல்பாட்டின் அடிப்படையில் 2021-22-ம் ஆண்டில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட உள்ளது.

அதற்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகிறது. முன்மொழிவுகள் அனுப்பப்படுவதற்கான படிவங்கள் அந்தந்த வட்டார இயக்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

சிறப்பாக செயல்பாட்டில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற மற்றும் பேரூராட்சிகளின் குழுக்களும் தேர்விற்கு உட்பட்டதாகும்.

எனவே மேற்கண்ட விவரப்படி சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்களின் மற்றும் கூட்டமைப்புகளிடம் இருந்து முன்மொழிவுகள் பெற்று வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) தேதிக்குள் மகளிர் திட்டம் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு "திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை" என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 27 March 2022 2:53 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்