/* */

கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் உரிமம் ரத்து: வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் உரிமம் ரத்து: வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை
X

உரக்கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், உரக்கிடங்குகளில் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உர விற்பனையாளர்கள் உரங்களை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்தல், உரப்பதுக்கல், உரிமம் இல்லாத உரங்களை விற்பனை செய்தல், விலைப்பட்டியல் பலகை பராமரிக்காமல் இருத்தல், அனுமதி பெறாத நிறுவனங்களிடம் உரங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்வது, விவசாயிகள் அல்லாத இதர நபர்களுக்கு விநியோகம் செய்வது மற்றும் குறிப்பாக அரசு நிர்ணயித்த விலைக்கு உரங்களை விற்பனை செய்யாமல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் போன்ற விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வுக்குப் பின் வேளாண்மை அதிகாரிகள் கூறுகையில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவதற்கு தேவையான உரங்கள் யூரியா 580 டன், பொட்டாஷ் 349 டன், டி.ஏ.பி. 796 டன், காம்ப்ளக்ஸ் 1,239 டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும்,

820 டன் டி.ஏ.பி., 5.162 டன் யூரியா, 475 டன் சூப்பர் பாஸ்பேட், 416 டன் பொட்டாஷ், 475 டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 4,720 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வேளாண்மை அதிகாரிகள் ஆய்வின் போது விதிமீறல்கள் தெரிய வந்தால் உர விற்பனை நிலையத்தின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும்

மேலும் விவசாயிகள் அரசு நிர்ணயித்த விலையினை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர விற்பனை நிலையங்களின் விவரங்களை தகுந்த ஆதாரங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்

Updated On: 15 Dec 2022 12:51 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?