/* */

பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட தயாரா? துரை வைகோ கேள்வி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட தயாரா என துரை வைகோ கேள்வி எழுப்பினார்.

HIGHLIGHTS

பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட தயாரா? துரை வைகோ கேள்வி
X

செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ.

வேலூர் மண்டல மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் திருவண்ணாமலையில் உள்ள தெற்கு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

துணைப் பொதுச் செயலாளர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கழகப் பொருளாளர் செந்தில் முன்னிலை வகித்தார். தணிக்கை குழு உறுப்பினர் பாசறை பாபு தொகுத்து வழங்கி வரவேற்புரை ஆற்றினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் சீனி கார்த்திகேயன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் உதயகுமார் ,திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் ,வேலூர் மாவட்ட செயலாளர் கௌதமன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ரத்தினகுமார், கிழக்கு மாவட்ட செயலாளர் சுதாகரன் ஆகியோர் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் தேர்தல் நிதி அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதி மு க முதன்மை செயலாளர் துரை வைகோ கூறுகையில், திமுக கூட்டணியில் 2 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவைத் தொகுதியை கேட்டுள்ளோம். பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தவறான தகவல்களைக் அளித்து வருகிறாா்.

தமிழகத்தில் பாஜக எழுச்சி அடைந்து வருகிறது. வளா்ந்து விட்டது என்று கூறுகிறாா்கள். அப்படியானால் மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெறட்டும். தேர்தலில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்படும் என்று தெரிவித்த பாஜக, இதுவரை குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்கவில்லை.

கா்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் காவிரி நீரைத் தராமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் இருப்பது நியாயமல்ல. தேர்தலில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்படும் என்று தெரிவித்த பாஜக, இதுவரை குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்கவில்லை. விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று கூறினார்கள், கடந்த 10 ஆண்டுகாலமாக எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையை கேட்பதாகவும் அதை மத்திய அரசு கொடுக்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெறட்டும் ,தேர்தலில் நிற்கட்டும், திராவிட இயக்கங்கள் குறித்து பேசுகிறார். பாஜகவிற்கு எழுச்சி உள்ளது என்று கூறுகிறார். கூட்டணியோ அல்லது தனியாகவோ நிற்கட்டும், அவரை சார்ந்த மதவாத பாஜகவிற்கு என்ன ஆதரவு உள்ளது என்பது தெரியும் என துரை வைகோ கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 20 Feb 2024 4:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...