/* */

விளையாட்டு மையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

விளையாட்டு மையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்

விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் மாவட்ட வாரியாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6, 7, மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையும் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் மூலம் நடைபெறும்.

இதில் தடகளம், இறகுபந்து, கூடைபந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்படஉள்ளது.

தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபாடி, டென்னிஸ், ஜீடோ, ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல், மேஜைப்பந்து ஆகிய போட்டிகள் மாணவிகளுக்கு நடத்தப்பட உள்ளது.

அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்களில் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதி முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்க மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் 24-ந் தேதி காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 May 2023 2:10 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  3. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  4. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  5. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  6. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  7. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  9. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  10. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு