/* */

செய்யாறு: ரூ.4½ லட்சம் குட்கா பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

செய்யாறில் சரக்கு வேனில் ரகசிய அறைகள் அமைத்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

செய்யாறு: ரூ.4½ லட்சம் குட்கா பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
X

ரூ.4½ லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமாருக்கு செய்யாறு பகுதியில் வாகனத்தில் குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் மாவட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்யானந்தன் மற்றும் போலீசார் இணைந்து செய்யாறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். வாகனத்தில் இருந்த 3 பேர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனை சோதனை செய்தனர். அந்த வேனில் இரண்டு ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு நூதன முறையில் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா கீழ்விஷாரம் புதுத் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (வயது 22), பரத் மோகன் (19), செய்யாறு தாலுகா சந்தைமேடு பகுதியை சேர்ந்த சாதிக் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, ரூ.4½ லட்சம் மதிப்புள்ள 350 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள், ரூ.1¾ லட்சம் ரொக்கம் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 4 April 2022 1:46 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  2. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  3. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  4. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  8. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  9. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...