/* */

புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது?

Pournami Girivalam Benefits -9-ம் தேதி அதிகாலை 4.09 மணிக்கு தொடங்கி, மறுநாள் (10-ம் தேதி) அதிகாலை 3.11 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு

HIGHLIGHTS

புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது?
X

பைல் படம்

Pournami Girivalam Benefits -மலையே மகேசன் என போற்றப்படும் திரு அண்ணாமலையை பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். அதன்படி, புரட்டாசி மாத பவுர்ணமி, வரும் 9-ம் தேதி அதிகாலை 4.09 மணிக்கு தொடங்கி, மறுநாள் (10-ம் தேதி) அதிகாலை 3.11 மணிக்கு நிறைவு பெறுகிறது.

மேற்கண்ட நேரத்தில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால், கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனால், கிரிவல பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

பௌர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

கிரிவலப் பாதையில் அன்னதானம் செய்பவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான கடிதம் அளித்து அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் தான் அன்னதானம் செய்ய வேண்டும். அனுமதி இன்றி யாரேனும் அன்னதானம் வழங்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜையை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவிலில் உள்ள கொடிமரத்தின் அருகிலுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, ஆகியவற்றிற்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

அதேபோல் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பிரதோஷ பூஜை நடைபெற்றது. நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர்.

மாட வீதிகளில் சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருந்த காரணத்தினாலும் நேற்று மாலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Oct 2022 6:51 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...