/* */

சுகாதாரத்துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.119 கோடியில் கட்டமைப்புப் பணிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப நிலையங்களில் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

HIGHLIGHTS

சுகாதாரத்துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.119 கோடியில் கட்டமைப்புப் பணிகள்
X

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய ஸ்கேன் கருவியை தொடக்கி வைத்து பார்லையிடும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில்மகேஷ்பொய்யாமொழி

தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைசார்பில் புதியகட்டிடங்கள்மற்றும் மருத்துவஉபகரணங்கள் உள்ளிட்டபல்வேறுமக்கள் நலத்திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர். மா. சுப்ரமணியன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, அரசுதலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் மா. சுப்ரமணியன்தெரிவித்தாவது:தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைசார்பில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.30 கோடி செலவில் மேமோகிராம் கருவி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது..இக்கருவி மூலம் ஆண்டுக்கு 1,000-1,500 நோயாளிகள் பயன் பெறுவார்கள்.ரூ.69 இலட்சம் செலவில் டிஜிடிடல் எக்ஸ்-ரே கருவி தொடங்கிவைக்கப்பட்டது .இக்கருவி மூலம் ஆண்டுக்கு 35,000 - 50,000 நோயாளிகள் பயன் பெறுவார்கள்

மேலும், அரசு இராசாமிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டரூ1.10 கோடி மதிப்பீட்டில் புளோரோஸ்கோபி வசதி கொண்ட டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவி துவக்கி வைக்கப்பட்டது. இக்கருவி மூலம் ஆண்டுக்கு 5,000-6,000 நோயாளிகள் பயன் பெறுவார்கள்.ரூ.14 இலட்சம் செலவில் அரசு இராசாமிராசுதார் மருத்துவமனையில் சிறுவர்களுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா ஆகியவை திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,ரூ.60 இலட்சம் செலவில் நெய்குப்பை ஆரம்பசுகாதாரநிலைய கூடுதல் கட்டிடம்,ரூ.60 இலட்சம் செலவில் ராஜாமடம் ஆரம்பசுகாதார நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது ஆக மொத்தம் ரூ4.43 கோடிசெலவில் 3 மருத்துவ உபகரணங்கள், 1 சிறுவர்களுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா மற்றும் 2 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

பல்வேறு மானியக் கோரிக்கைகளில் பல அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார். அந்தவகையில் சுகாதாரத் துறையில் தஞ்சாவூர் மாவட்டத்தில்ரூ.119.50 கோடி மதிப்பீட்டில் 24அறிவிப்புகளின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவமனைகள், ஆரம்ப நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு மருத்துவ கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும்,ரூ.23.75 கோடி தீவிர சிகிச்சைப் பிரிவு, ரூ.12 கோடி தாய்சேய் நலப் பிரிவுக்கான கட்டிடம், ரூ.46 கோடியில் புதிய புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, ரூ.48 இலட்சத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம், ரூ.13 இலட்சத்தில் புதிய இரத்தசுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் நவீனஉபகரணங்கள், ரூ1.20 கோடியில் புதிய RT-PCR பரிசோதனை கருவி, கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.12.16கோடி ஒருங்கிணைந்த அவசியஆய்வக சேவைகள், தஞ்சாவூர் மாவட்ட மருத்துவ மனைக்கு ரூ.12 கோடி புதிய கட்டிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவு.

பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனையில் ரூ1.05 கோடி ஆரம்ப நிலையில் கால் இழப்புகளை குறைக்கும் திட்டம் , கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்டதாலுக்கா மருத்துவமனைகளில் ரூ5.26 இலட்சம் விபத்து பதிவுக்கான தரவுகளைபதிவேற்றம் செய்ய புதியமென்பொருள்.

மாவட்ட மருத்துவமனைக்கு ரூ.3.24 கோடி, புதியவட்டார பொதுசுகாதார அலகு தொண்டராம்பட்டு, சிறுவிடுதி, சிலத்தூர், கபிஸ்தலம் கட்டிடங்கள் ரூ.1.95 கோடி, 6 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள்ரூ.82.90 இலட்சம், புதிய கட்டிடம் காசவளநாடு புதூர் ஆரம்ப சுகாதார நிலையம்ரூ.20 இலட்சம், புதியசெவிலியர் குடியிருப்புகட்டிடம் பட்டேஸ்வரம் ஆரம்பசுகாதாரநிலையம் ரூ1.20 கோடி, புதியகட்டிடம் காமராஜர் ரோடு நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையம், ரூ.99.40 இலட்சம், ஆய்வக கட்டிடங்கள் நிலையங்கள் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.24 இலட்சம், நவீனகலர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் கருவி மற்றும் மேலக்காவேரிநகர் புற ஆரம்பசுகாதார நிலையம் ரூ1.96 கோடி , 140 கிராம – துணை சுகாதார நிலையங்கள் நல்வாழ்வு மையங்களாக மாற்றுதல் போன்ற பல்வேறு மானியக் கோரிக்கை முதலமைச்சரால் தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தயாரிக்கப்பட்ட 13 செயற்கை கால்கள் பல்வேறு காரணங்களினால் தங்கள் கால்களை இழக்க நேரிட்ட 13 நபர்களுக்கு வழங்கினார். சிறப்பாக மருத்துவப் பணி மேற்கொண்ட மருத்துவர்களை பாராட்டி பதக்கங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் , மயிலாடுதுறை நாடாளுமன்றஉறுப்பினர் செ.இராமலிங்கம் ,சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்),. கா .அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்),. க.சரவணன் (கும்பகோணம்), மாவட்டஊராட்சிதலைவர் ஆர் .உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ச .மருதுதுரை, இணை இயக்குனர் (சுகாதாரம் மற்றும் குடும்பநலம்) திலகம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் எஸ் நமச்சிவாயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்