/* */

செஞ்சியில் நூதன முறையில் மளிகை கடையில் திருட்டு

செஞ்சி பகுதியில் உள்ள மளிகை கடையில் நூதன முறையில் திருடிய பலே திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

செஞ்சியில் நூதன முறையில் மளிகை கடையில் திருட்டு
X

நூதன முறை திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி.

செஞ்சி மளிகை கடையில் ரூ.1 லட்சம் திருட்டு போனது. கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க தலையில் பாத்திரத்தை கவிழ்த்தப்படி வந்த பலே திருடனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ராஜேந்திர நகரை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 65). இவர் செஞ்சி காந்தி கடை வீதியில் ஒருக்கட்டிடத்தில் மளிகை கடையும், அதன் மேல் தளத்தில் சூப்பர் மார்க்கெட்டும் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றவர் நேற்று காலை வந்து கடையை திறந்தார். அப்போது மளிகை கடையில் இருந்த கல்லா பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு மொட்டை மாடியின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதன் மூலம் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. மளிகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அவர் பார்த்தார். அப்போது, கடையின் மேல் மாடி வழியாக ஒரு நபர், தலையில் பெரிய பாத்திரத்தை கவிழ்த்தபடி மளிகை கடைக்குள் வந்து, பணத்தை திருடி சென்று இருப்பது பதிவாகி இருந்தது.

கண்காணிப்பு கேமராக்கள் மூலம், தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக பாத்திரத்தை அந்த நபர் தலையில் கவிழ்த்தபடி வந்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, ராஜகோபால் செஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர், தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் மூலம் விசாரணை நடத்தினரா, தலைமையில் பாத்திரம் கவித்து தப்பிய அந்த பலே திருடனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் செஞ்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த வாரம் அதேபகுதியில் உள்ள ஒரு கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்தநிலையில், வியாபாரிகள் அனைவரும் வர்த்தக சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினியை நேரில் சந்தித்து, திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் இந்த நூதன திருட்டால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் கண்காணிப்பு கேமரா இருந்தும் திருடர்கள் இது மாதிரி பல்வேறு வழிகளில் திருடுவது ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது, அதனால் போலீசார் இரவு நேர வந்து பணியிலும், மற்றும் பகல் வேலைகளில் புதிய நபர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 Oct 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!