/* */

விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் டி.ஐ.ஜி. ஆய்வு

திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் வேலூர் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சத்தியபிரியா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் டி.ஐ.ஜி. ஆய்வு
X

விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளை நேரில் ஆய்வு செய்த டிஐஜி சத்யபிரியா, மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வார்கள்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சிலைகள் அமைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு இருந்தது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி விநாயகர் சிலைகளை அமைக்க விரும்புவோர் முன்அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சிலைகளை அமைக்க வேண்டும் என்றும், அனுமதிக்கப்படும் வழிதடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளதாக இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் அருண்குமார் தெரிவித்தார். தொடர்ந்து வருகிற 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் திருவண்ணாமலை காந்தி சிலை அருகிலிருந்து இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன விழாவையொட்டி புறப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாமரை குளத்தில் நிறைவடையவுள்ளது.

முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சத்தியபிரியா, திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் போலீசாருக்கு அவர் அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது டிஎஸ்பி குணசேகரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Updated On: 29 Aug 2022 12:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு