/* */

திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்..!

நகராட்சி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு  விலையில்லா சைக்கிள்..!
X

மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கிய கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது

விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன் முன்னிலை வகித்தார். விழாவில் 2,799 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் இருந்து மேசை, இருக்கைகள் வழங்கப்பட்டன.

விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

இப்பள்ளி, மாவட்டத்தின் முதன்மை பள்ளியாக திகழ்கிறது. 10, 12-ம் வகுப்புகளில் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் சிறப்பாக உள்ளது. தேர்ச்சி மட்டுமே முக்கியத்துவம் கிடையாது. மதிப்பெண் அதிகமாக எடுப்பது தான் முக்கியம். அதற்காக முயற்சி எடுக்க வேண்டும். உங்களால் எதுவும் முடியும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளிப்பருவத்தில் உங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வருவது கட்டாயம்.

உங்களை குறைகூறுபவர்களையும், மட்டம் தட்டி பேசுபவர்களையும் கண்டு கொள்ளக் கூடாது. இலக்கை அடைவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். உலகம் கைக்குள் அடங்கி உள்ளது. மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். மாணவர்களை தினமும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கான பாதையை காட்ட வேண்டும். மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது என நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

முன்னதாக மாநில தடகள சங்க துணை தகவலை டாக்டர் எ.வ.வே.கம்பன் பேசுகையில்,

''தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படிக்கும் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஒரு தந்தையாக செயல்படுகிறார். அரசின் திட்டங்களை பயன்படுத்தி வரும் காலங்களில் 100 சதவீத தேர்ச்சியை கொடுக்க வேண்டும்'' என்றார்.

நிகழ்ச்சியில், நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், தி.மு.க.நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரியாவிஜயரங்கன், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் டி.வி.எம்.நேரு , நகர மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Aug 2023 1:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா