/* */

சினிமா பாணியில் வலம்புரி சங்கு விற்பனை செய்ய முயன்ற மோசடி கும்பல் கைது

சினிமா பாணியில் வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயன்ற மோசடி கும்பலை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சினிமா பாணியில் வலம்புரி சங்கு விற்பனை செய்ய முயன்ற மோசடி கும்பல் கைது
X

பொய்யான வலம்புரி சங்கு.

பித்தளையை இருடியம் என்று கூறியும், அரசியில் வலம்புரி சங்கை வைத்தால் தங்கமாக மாறும் என்றும், சதுரங்க வேட்டை படத்தில் நாயகன் பல்வேறு மோசடிகளை செய்வதுபோல வலம்புரி சங்கை வைத்து ஒரு கும்பல் திருவண்ணாமலையில் மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர் செக்கடி கிராமத்தைச் சேர்ந்த பரணி என்பவரிடம், எங்களிடம் அபூர்வமான வலம்புரி சங்கு இருக்கிறது. அதை அரிசியில் வைத்தால் அத்தனையும் தங்கமாக மாறும். இது இரண்டு கோடி ரூபாய். எங்களுக்கு தெரிந்த ஒருவர் உங்களின் நம்பரைக் கொடுத்தார். இதை விற்பனை செய்து கொடுத்தால் உங்களுக்கு கமிசனாக பல லட்சம் ரூபாய் தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறி இருக்கிறார்.

திருவண்ணாமலை கிரிவலம் சாலைக்கு இரவில் வாருங்கள். அங்கு வந்து சங்கினை காட்டுகிறோம். பார்த்துவிட்டு வியாபாரம் பேசுங்கள் என்று சொல்லவும் சரி என்று சொல்லி இருக்கிறார். அவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த பரணி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதாரண உடையில் போலீசார் அமர்ந்திருந்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு காரில் வந்த அவர்கள், தனியாக நின்றிருந்த பரணி மற்றும் மாற்று உடையில் சென்றிருந்த காவலர்கள் உள்ளிட்டோரை அழைத்துள்ளனர். பரணி உள்ளிட்ட இருவரை மட்டும் காரில் ஏற்றிய அந்த கும்பல் வலம்புரி சங்கை காண்பித்துள்ளனர். அதனை பார்த்தபோது தெருவில் விற்கப்படும் சாதாரண சங்கு என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் காரில் வந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை வா.உ.சி நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ், தீபக், ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த சதீஷ், வேட்டவலம் உமா சங்கர், செஞ்சி ஜெயங்கொண்டம் அரசு, அரியாங்குப்பம் ராம்குமார், திருவண்ணாமலை பெரிய கோபுரம் அஸ்வத்தாமன், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நாகராஜ் என்பது தெரியவந்தது.

விசாரணையில் சாதாரண சங்கினை வலம்புரி சங்கு என்று சொல்லி பல கோடிக்கு விற்பனை செய்து மோசடி செய்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து எட்டு பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமாரிடம் ஆஜர்படுத்தினர். மேலும் அவர்கள் வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் வேறு ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Aug 2021 9:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  2. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  3. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  4. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  5. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  6. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  9. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  10. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!