/* */

முதல்முறையாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலின் கோபுரங்கள் தீயணைப்புத் துறையினர் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

முதல்முறையாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
X

கோபுரங்கள் சுத்தம் செய்யும் தீயணைப்பு வீரர்கள்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை மற்றும் இரவில் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் சாமி வீதியுலா நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 6-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற தீபத் திருவிழா இந்த கட்டுப்பாடுகள் தளர்வுடன் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனால் தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டு 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு கோவிலில் வாகனங்கள் சீரமைக்கும் பணி, மின்விளக்குகள் பொருத்தும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி

அதன் ஒரு பகுதியாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உள்ளே வந்து செல்லும் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுரங்களும் சுத்தம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுவரைக்கும் இப்பணியை செய்ததில்லை இப்போதுதான் முதல்முறையாக செய்கின்றனர்.

மத்திய சென்னை மண்டலத்தில் இருந்து மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையிலான 15 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் பிராண்டோ ஸ்கை லிப்ட் 54 மீட்டர் உயரம் வரை செல்லும் அதாவது 162 அடி உயரத்திற்கு மேல் செல்லக்கூடிய ராட்சத தீயணைப்பு மீட்பு எந்திரத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 34 லட்சம் ரொக்கப்பணம் வசூலாகி உள்ளது.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி பொருட்களையும், உண்டியலில் காணிக்கை செலுத்துவம் வழக்கம். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி ஐப்பசி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் பக்தர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இறுதியாக ஐப்பசி மாதத்திற்கான உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 34 லட்சம் ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 174 கிராம் தங்கம் மற்றும் 852 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோவில் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Nov 2022 12:50 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...